search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் தேர்வு"

    • நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
    • உடுமலையில் உள்ள டென்னிஸ் கிளப்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது.

    திருப்பூர்:

    உடுமலையில் உள்ள டென்னிஸ் கிளப்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர் கபில் கைலாஸ் 17 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் பிர்த்திவ் ஆர்யா மற்றும் கபில் கைலாஸ் முதலிடம் பெற்று மாநில அளவிலான ேபாட்டிக்கு தேர்வு பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 182 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாக ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூத் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி மின்னியல் துறைத்தலைவர் மேஜர் நாகராஜன் வாழ்த்தி பேசினார். முன்னாள் வேலைவாய்ப்பு அதிகாரி மரியதாஸ் வரவேற்றார்.

    வேலைவாய்ப்பு முகாமில் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம், காளையார்கோவில் செயின்ட் மைக்கேல், ராமநாதபுரம் செய்யது அம்மாள், கீழக்கரை முகமது சதக் ஆகிய பொறியியல் கல்லூரி மாணவர்களும், பரமக்குடி முத்தாலம்மன், வேம்பார் தேவநேசன், காளையார்கோவில் செயின்ட் மைக்கேல், ராமேசுவரம் உதயம், கீழக்கரை முகமது சதக் ஆகிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் துணை மேலாளர் சங்கர் தங்களது நிறுவனத்தை அறிமுகப்படுத்தி நேர்முகத் தேர்வை நடத்தினார். ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரிவு மேலாளர் வேல்மணி மற்றும் உதவி பொது மேலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் நேர்முக தேர்வுகளை நடத்தினர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாணவர் களுக்கு பணிநியமன ஆணை களை வழங்கினர். இதில் 182 மாணவர்கள் ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் கல்லூரி வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூத் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி துணைமுதல்வர் சேக்தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை பாடி லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனம் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் 3-ம் ஆண்டு எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களுக்கு வளாக நேர்முகத்தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். சென்னை லூகாஸ் டி.வி.எஸ். துணைமேலாளர் ரசீத், எச்.ஆர்.அலுவலர் சந்தானம் ஆகியோர் தங்கள் நிறுவனத்துக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் மரியதாஸ் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி துணைமுதல்வர் சேக்தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.

    9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.

    குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ்‌, நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    • விண்ணப்பிக்க 8-ந்தேதி கடைசி நாள்
    • போட்டி வருகிற 11-ந் தேதி காலை நடைபெறும்

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கடிதத்தின்படி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையம் செயல்படுகிறது.

    பள்ளிகளில் 9-ம் மற்றும் 11-ம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு, தேசிய சீனியர் பிரிவில் பதக்கம் வென்று கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவியர்கள் தகுதியின் படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    எனவே வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் தங்கி பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மேற்படி விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பூர்த்தி செய்தல் வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்து, சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 8-ந்தேதி ஆகும். மேலும் 2022-2023 - ஆம் ஆண்டில் வேலூர் சத்துவாச்சாரி தூக்கும் முதன்மை நிலை மையத்திற்கு மாணவ, மாணவியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநில அளவிலான தேர்வுகள் மேற்படி மையத்தில் வருகிற 11-ந் தேதி காலை நடைபெறும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×